ஆர்சனல் சார்பாக டெக்லான் றைஸ் இரண்டு கோல்களையும், மிகெல் மெரினோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர்ண் மியூனிச் தோற்றது. மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை தோமஸ் மல்லர் பெற்றதோடு, இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், டேவிடே பிரெட்டசி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.