பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான மொனாக்கோவில் அடுத்த பருவத்துக்கு முன்னர் இணையும் மேம்பட்ட பேச்சுக்களில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரர் எரிக் டயர் காணப்படுகின்றார்.
மியூனிச்சுடனான 31 வயதான டயரின் ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்றது.
மேலதிகமாக ஓராண்டுத் தெரிவுடன் கூடிய மூன்றாண்டு ஒப்பந்தமொன்று குறித்தே பேச்சுக்கள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.