15.4 C
Scarborough

முத்தரப்பு லீக் போட்டி – பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாதனை

Must read

முத்தரப்பு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்தது.

பாகிஸ்தான் சென்றுள்ள தென்னாபிரிக்கா- நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறியது. கராச்சியில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு அணித்தலைவர் பவுமா (82), பிரீட்ஸ்கே (83), கிளாசன் (87) கைகொடுத்தனர். தென்னாப்ரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ஓட்டங்களை எடுத்தது. வெர்ரின்னே (44) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் (41), பாபர் அசாம் (23) ஜோடி நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தது. அபாரமாக ஆடிய அணித்தலைவர் முகம்மது ரிஸ்வான் (122), சல்மான் அலி ஆகா (134) சதம் கடந்து வெற்றிக்கு உதவினர். பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை (355) ‘சேஸ்’ செய்து, தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், 2022 இல் லாகூரில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 349 ஓட்டங்களை எட்டியது.

இறுதிப்போட்டியில் (பெப்ரவரி 14, கராச்சி) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article