தினேஷ் விஜன் தயாரித்துள்ள காதல் படமான ‘பரம் சுந்தரி’ திரைப்படம் நேற்று வெளியானது. இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிப்பு, திரைக்கதை. காமெடி காட்சிகள், ஒளிப்பதிவு முக்கியமாக இசை என ரசிகர்கள் அனைத்தையும் ரசித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் படம். பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டதாகும்.
‘தேவரா’ திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
முதல் நாள் வசூலாக ‘பரம் சுந்தரி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 7.37 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகளவில் இப்படம் முதல் நாளில் இந்திய மதிப்பில் ரூ 10 கோடி வசூலித்துள்ளது.