கனடாவின் தெற்கு சஸ்காட்செவனில் உள்ள பஃபலோ பவுண்ட் மாகாண பூங்காவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இப்போது மின்னணு முறையில் கண்காணிக்கப்படுகின்றன.
ரெஜினாவிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் உள்ள 14 விலங்குகளுக்கு பூங்கா ஊழியர்கள் ஜிபிஎஸ் திறன் கொண்ட இயர் (GPS ear tags) டெக்ஸ்களை இணைத்துள்ளனர்.
சூரிய சக்தியில் இயங்கும் குறித்த டெக்ஸ்கள் அருகிலுள்ள தகவல் தொடர்பு கோபுரத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகின்றன, பின்னர் இது ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பூங்காவின் பார்வையாளர் மையத்தில் உள்ள ஒரு கணினி நிரலுக்கு காட்டெருமையின் அப்போதைய இருப்பிடத்தை வழங்குகிறது.
இதன் மூலம் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எருமைகள் எங்கே உள்ளன என்பதை இலகுவாக அடையாளம் காண்கின்றனர்.
சஸ்காட்செவனில் உள்ள காட்டெருமைகளைக் கொண்ட ஒரே மாகாண பூங்கா பஃபலோ பவுண்ட் என்றும், அவை 1972 முதல் அங்கு உள்ளன என்றும் பூங்காவின் மேலாளர் டேவ் ப்ஜர்னாசன் கூறினார். இந்த காதுகளில் பொருத்தப்படும் குறித்த கருவி முதன்முதலில் அக்டோபர் 2024 இல் பயன்படுத்தப்பட்டன.
இதனூடாக தொலைக்காட்சித் திரையில் காட்டெருமை சிறிய வெள்ளைப் புள்ளிகளாகவும், புல்வெளியின் செயற்கைக்கோள் காட்சியில் தொடர்புடைய பெயராகவும் தோன்றும்.