மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி உடன் மோதினார்.
முதல் செட்டை முசெட்டி6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-1, 6-0 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.