புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படாது.
அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே தான் கூறியதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒரு போதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும் புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கு சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.