15.1 C
Scarborough

மறைந்த பாடகி பவதாரணியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான பதிவு

Must read

இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில் தனக்கென தனி இரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா… மஸ்தானா… பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதே போல் அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, பிரண்ட்ஸ், தனம், பிதாமகன், நேருக்கு நேர் என்று பல படங்களில் பாடல்கள் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இளையராஜா இசையில் வெளியான பாரதி படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்றுநோய் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று பாடகி பவதாரிணியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி! ” என்று தெரிவித்திருக்கிறார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article