ஒன்ராறியோவின் சுற்றுச்சூழல் அமைச்சர் டோட் மெக்கார்த்தி, தனது அரசாங்கத்துக்கான கடிதம் ஒன்றுக்காக பழங்குடியின மக்களின் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
குறித்த கடிதத்தில், (பர்ஸ்ட் நேஷன்) பழங்குடியின சமூகங்களுக்கு சுத்தமான குடிநீரை உறுதி செய்யும் பிரேரணையை நிறைவேற்ற வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அதற்காக பழங்குடியின மக்களின் தலைவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எனினும் பழங்குடியின மக்களின் தலைவர்கள் அவர் மன்னிப்பு கேட்டதில் அதிருப்தி அடைந்துள்ளனர்,அவர்கள் அது “அர்த்தமற்றது” என கூறுகின்றனர்.
அமைச்சர் தனது கோரிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அமைச்சர் தனது பணியைத் தொடர்வார் என்று மாகாணம் கூறியுள்ளது.
பழங்குடியின மக்களின் தலைவர்கள் ஏன் வருத்தப்படுகிறார்கள்?
அமைச்சரின் மன்னிப்பு முக்கிய பிரச்சினையை நிவர்த்தி செய்யவில்லை என்றும், அவர் தனது தடயங்களை மறைக்க முயற்சிக்கிறார் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.
அமைச்சர் தங்கள் சமூகங்களுக்கு சுத்தமான குடிநீருக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் பழங்குடியின சமூகங்களுக்கு சுத்தமான குடிநீரை உறுதி செய்வதற்காக, இலையுதிர்காலத்தில் பிரேரணையை மீண்டும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.