5.3 C
Scarborough

மன்னார் பொது முடக்கத்துக்கு அனைவருக்கும் அழைப்பு

Must read

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் பொது முடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

எமது போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்துவதுடன் , வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரச, தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாளை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும் கண்டன பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடைவதோடு பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.

குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும்.

எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர்,உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article