இலங்கையில் மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களில் குறிப்பிடத்தக்க மோசடியாளர்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் மதுவரி திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது அரசு வருமானத்தை ஈட்டும் துறைகளில் மதுவரி திணைக்களம் பிரதான ஒன்றாக காணப்படுகிறது.
சட்ட விரோத மதுபானம் உற்பத்திகளை தடுப்பது மற்றும் அனுமதி பெற்ற மதுபான நிலையங்களிடமிருந்து வரிகளை பெறுவது திணிக்களத்தின் பிரதான பணியாகும்.
இதற்கமைய திணைக்களத்தினால் இந்த ஆண்டில் 242 மில்லியன் ரூபாய் என்ற லாப இலக்கு அடையப்பட்டுள்ளது. இந்த லாபத்தை மேலும் அதிகரிக்க முடியும்.
எனினும் இது திணைக்களத்தின் பணிபுரிவோரில் 20 தொடக்கம் 30 வீதமானவர்கள் மோசடியாளர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.
கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டர்களோ அவ்வாறே தற்போதும் செயல்படுகிறார்கள் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

