யாழ் தேவி தொடரூந்தை இயக்கிய தலைமை கட்டுப்பாட்டாளர் ஒருவர் கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த தொடருந்து பிற்பகல் 2. 40 மணியளவில் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தை அடைந்துள்ளது.
இதன்போது குறித்த தலைமை கட்டுப்பாட்டாளர் மது அருந்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

