சட்டம் ஒழுங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு விலகி உள்ளதாக கருதுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் கட்சி அமைச்சர்கள் தினமும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக கூறினாலும் சில குழுக்களுக்கு ஏற்றவாறு கொலைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இந்த சம்பவங்களை அரசாங்கம் அவசரமாக திட்டமிட்ட குற்ற குழுக்களுடனும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடனும் தொடர்பு படுத்துகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொலைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் மிக குறைவு மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது கவலை அளிக்கிறது தற்போதைய நிர்வாகம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
அதிகரித்து வரும் கொலைகளால் எவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவில்லை பொது சேவையில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கம் பாதுகாப்பை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

