13வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் இந்திய நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
இதில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் 12 வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணி தலைவர் சமாரி அத்தபத்து பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 253 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்துள்ளது.

