கரீபியனில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அமெரிக்க ராணுவம் குண்டு தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த போதைப் பொருள் கடத்தல் கப்பல் அழிக்கப்பட்டுள்ளது. இதனை மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன் இந்த கப்பலில் பெரும்பாலும் பென்டானையில் மற்றும் பிற சட்ட விரோத போதை பொருட்கள் இருந்ததாக உளவுத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கொலம்பியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
இந்த கப்பல் அமெரிக்காவிற்குள் நுழைந்து இருந்தால் 25 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அவர் பதிவிட்டுள்ளார் கடந்த மாத தொடக்கத்தில் கரிபியனில் போதைப்பொருள் கடத்தி வரும் நீர் மூழ்கி கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய ஆறாவது தாக்குதல் இதுவாகும் கொலம்பியா அதிபர் கஷ்டவோ பெட்றோவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

