15.4 C
Scarborough

பொலொக்னாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

Must read

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது.

பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ ஒர்சோலினி பெற்றிருந்தார்.

இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (21) அதிகாலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடெர்சன் பெற்றிருந்தார்.

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இன்டரும், நாப்போலியும் தலா 71 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி முறையே முதலாம், இரண்டாமிடங்களில் காணப்படுகின்றன. 64 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 60 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னாவும் காணப்படுகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article