18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்ட நிலையில், லக்னோவில் இன்று (23) நடைபெறும் 65-வது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டிற்கான நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளட இழப்பி்ற்கு 231 ஓட்டங்களை பெற்று பெங்களூரு அணிக்கு 232 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 189 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தேல்வியடைந்தது.