வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் மஹரகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த புதன்கிழமை (22) பிரதேச சபை தலைவரின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பிலான விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 குழுக்கள் சி.சி.டி.வி (CCTV) கெமராக்களை பரிசோதிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிரதான சந்தேக நபர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

