பிரதமர் ஹரினி அமரசூரிய தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல் தடவையாக யாப்பாணத்திற்கு நாளை (15) செல்லவுள்ளார்.
அவர், நாளை காலை கோப்பாய் கலாசாலையில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதோடு பிரதமர், அதன் பின்னர் வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
அதனைத் தொடர்ந்து நாளை மாலை ஏழாலை, சுழிபுரம், சண்டிலிப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் பிரதமர் பங்கெடுக்கவுள்ளார். நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் ஹரிணி செல்லவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.