முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோர் பாதுகாப்பு வாகனங்களை கோரியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனூடாக ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் மாத்திரமே ரத்து செய்யப்பட்டன. பாதுகாப்பு முழுமையாக குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால ஆகியோர் குண்டு துளைக்காத வாகனத்தை கோரியுள்ளார்கள்.
பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாகனங்களை மீண்டும் வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

