19.9 C
Scarborough

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

Must read

 

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார்.

அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே, உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article