11.6 C
Scarborough

தரம் குறைந்த நிலக்கரி விவகாரம் – நீடித்த கோப் குழுவின் விசாரணை!

Must read

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான ‘கோப்’ (COPE) குழு நடத்திய விசாரணை கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் இடம்பெற்றது.

நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் தலைவர்நிஷாந்த சமரவீர தலைமையில் ஆரம்பமான இந்தக் கூட்டம் சுமார் ஆறரை மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னணியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, நிலக்கரி இறக்குமதியின் போது தெரியாமல் தவறு நடந்துள்ளதாக ஒரு தரப்பு உறுப்பினர்கள் வாதிட்டனர். எனினும், இது திட்டமிட்டு தெரிந்தே செய்யப்பட்ட தவறு என மற்றுமொரு தரப்பினர் கடுமையாகச் சாடியதை அடுத்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமை, நிலக்கரி கொள்வனவு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் சர்ச்சைக்குரிய நிலக்கரி மாதிரிகள் தொடர்பான ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ஆகியன இதன்போது மேசையில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த நீண்ட நேர விசாரணையில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் டி.வி. சானக்க ஆகியோர் இறுதிவரை கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர்.

குறித்த விசாரணைக்காக மின்சக்தி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். நிலக்கரி கொள்வனவு ஊடாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் குறித்து இதன்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article