சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் தற்போதைய நிலவரப்படி சினிமா வணிகத்தில் விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இதனால், பெரிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் சிவகார்த்திகேயனையே முதலில் அணுக முயற்சித்து வருகின்றனர்.
இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே நடித்துவரும் படத்திற்கு, ‘மதராஸி’ எனப் பெயரிட்டுள்ளதை டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அதேபோல், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டு வாழ்த்திய நிலையில், தற்போது பராசக்தி படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.