ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி
வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்,” என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.