முல்லைத்தீவு நந்திக்கடலின் கிழக்கு கரையிலும் பெருமளவு நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதிகளவு நீரால் நந்திக்கடலின் கிழக்குக் கரையும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
A34 வீதியில் மஞ்சள் பாலத்தில் இருந்து முல்லைத்தீவு நகரம் வரையான நந்திக்கடலின் பகுதிகளில் அதிகளவு நீர் சேர்ந்துள்ளது.
இதன்படி வழமையாக இந்த பகுதியில் அதிகளவில் நீர் இருப்பதில்லை என்றும், மாரி மழையின் போது ஏற்படும் நீரோட்டத்தினால் இவ்வாறு ஏற்படுவதாக நந்திக்கடலின் இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவோர் குறிப்பிட்டுள்ளனர்.
பாலக்கட்டுவான் குளத்தில் நீர் நிரம்பியதும் அதன் கலிங்கி பாய்வதனாலும் அதிகளவு நீர் மஞ்சள் பாலத்தின் வழியாக நந்திக்கடலை அடைகின்றது எனவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இதன் போது வௌவால்வெளி வயல் நிலங்களில் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.