நடிகர் சூரியன் நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்’ திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
அப்போது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் “அவர் அழைத்தால், அவருடைய கட்சியில் சேருவீர்களா? தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய சூரி, “எனக்கு நிறைய திரைப்பட வேலைகள் இருக்கிறது. அதை பார்க்க வேண்டும். உங்களை நான் திடீரென அழைத்தால், என்னோடு நீங்கள் வருவீர்களா?” என்று கேட்டார்.
மேலும், “நடிகர் விஜய் சரியான திசைகளில் சென்று கொண்டிருக்கிறார். என் வேலையை நான் பார்க்கிறேன்,” என்றும் கூறினார்.