அமெரிக்காவின் அரச துறைக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சட்டமூலம் நிறைவேற தேவையான 60% பெரும்பான்மையை ட்ரம்ப் அரசாங்கத்தால் பெற முடியவில்லை.இதனால் அமெரிக்க அரச நிர்வாகம் தொடர்ந்து முடங்கியுள்ளது.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் நரக தூதராக தோன்றி பாடல் பாடுவது போன்ற ஏ.ஐ வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில் நரகத்தூதர் போல தோற்றமளிக்கும் அமெரிக்க ட்ரம்ப், அரசு நிர்வாக முடக்கத்தை எதிர்க்கும் விதமான கருத்துக்கள் அடங்கிய பாடலை பாடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே. டி வான்ஸ் மேளதாளம் இசைக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் மீசை தாடி வைத்த குழந்தைகள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதனை ட்ரம்ப் தனது சோசியல் மீடியாவில் பதிவிட்ட நிலையில் அது பாரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.

