நடிகர் சூரிதனக்கு கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.
‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின், நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் ‘ஏழு கடல் ஏழு மலை’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சூரி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், ‘சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதே வேலை பார்த்து வந்ததை நினைவுகூர்ந்துள்ளார்