பதிமூன்றாவது மகளிர் உலகக் கண்ட கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இடம்பெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும் லீக் சுற்று முடிவில் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதற்கமைய அவுஸ்திரேலியா, இங்கிலாந்து,தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
போட்டியில் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே அவுஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாபிரிக்க அணி தடுமாறி வந்தது. அந்த அணி 24 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அவுஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்து வீசி அலனா கிங் ஏழு விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 98 என்ற ஓட்ட இலக்குடன் அவுஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

