134-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 5 நகரங்களில் நடந்து வந்தது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நடப்பு சம்பியனான நோர்த் ஈஸ்ட் யுனைனெட் எப்.சி.யும். அறிமுக அணியான டைமண்ட் ஹார்பர் எப்.சி.யும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இவ்விரு அணிகளில் சம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.1.21 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்தனர்.
ஆசியாவின் மிகவும் பழமையான கால்பந்து தொடரான இதில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசுத் தொகை இதுவாகும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.