6.7 C
Scarborough

தமிழ் நாகரிகத்திற்கு தொன்மையான வரலாறு உள்ளது – ராகுல் காந்தி !

Must read

தமிழ் நாகரிகத்திற்கு என மிகத் தொன்மையான வரலாறு உள்ளது என நாங்குநேரி பரப்புரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என வெளிப்படையாக பேசுகிறது பாஜக. அனைத்து மாநிலங்களின் மொழிகளையும், கலாசாரத்தையும் தங்களின் கீழ் கொண்டு வர பார்க்கிறது பாஜக. தமிழ்நாட்டை கைப்பற்ற அதிமுக என்ற முகமூடியை பயன்படுத்துகிறது பாஜக. ஒரு பக்கம் தமிழ்நாட்டின் பெருமையை காக்க போராடும் நாங்கள், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் பெருமை அழிக்க முயற்சிக்கும் பாஜக.

இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றி தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயன்றது பாஜக. அதனால்தான் தொகுதி மறுவரையறை மசோதாவை முறியடித்து மோடிக்கு மகத்தான தோல்வியை பரிசளித்தோம். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வந்து கூட்டாட்சியை சிதைக்கப் பார்த்தால் மோடிக்கு தொடர் தோல்விகளை பரிசளிப்போம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்ட போதே அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கோரினோம். என்று கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article