டொரண்டோவின் கடற்கரை பகுதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்ததை அடுத்து, சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
காலை 9:37 மணியளவில் ஒரு பாதசாரி மற்றும் சைக்கிள் செலுத்திய மற்றுமொருவர் மீது வாகனம் மோதியதாக லோயர் ஸ்பேடினா அவென்யூ மற்றும் குயின்ஸ் கீ வெஸ்டுக்கு அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட ஒருவர் அருகில் இருந்த சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதோடு மற்றொருவர் சம்பவ இடத்தில் பரிசோதிக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இருவரையும் மோதிய வாகன சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் விளைவாக, லோயர் ஸ்பேடினா அவென்யூவில் உள்ள இரு திசைகளும் லேக் ஷோர் பவுல்வர்டில் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், லோயர் ஸ்பேடினா மற்றும் குயின்ஸ் கீ சந்தியும் மூடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் தாமதங்ககள் நிலவும் என்பதால் சாரதிகள் மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

