13.1 C
Scarborough

டிசம்பரில் இந்தியா வரும் மெஸ்ஸி

Must read

கொல்கத்தா: அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.

லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப் படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் காத்திருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

மெஸ்​ஸியின் சுற்​றுப்​பயணம் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. அவரது அதி​காரப்​பூர்வ அறி​விப்​புக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம், ஒரு​வேளை இதுதொடர்​பான அறி​விப்பு மெஸ்​ஸியின் சமூக வலைதள பக்​கத்​தில் விரை​வில் வெளி​யாகக்​கூடும்” என கொல்​கத்தா வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

பயணத்​திட்​டத்​தின்​படி, லயோனல் மெஸ்ஸி வரும் டிசம்​பர் 12-ம் தேதி இரவு 10 மணி​யள​வில் கொல்​கத்​தாவுக்கு வந்து சேரு​வார். இங்கு அவர், இரண்டு பகல், ஒரு இரவு தங்​கு​வார். 13-ம் திகதி காலை 9 மணி அளவில் பிரபலங்​களு​டன் நடை​பெறும் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி கலந்து கொள்​கிறார்.

தொடர்ந்து கொல்​கத்தா விஐபி சாலை​யில் உள்ள லேக் டவுன் பூமி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்​கிறார். உலகிலேயே மெஸ்​ஸிக்கு வைக்​கப்​பட்​டுள்ள மிக உயர​மான சிலை​யாக இது அமை​யும் என போட்டி ஏற்​பாட்​டாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதன் பின்​னர் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம் செல்​லும் லயோனல் மெஸ்​ஸி, அங்கு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை நடை​பெறும் இசை நிகழ்ச்சி மற்​றும் கோட் (GOAT) கோப்பை போட்​டி​யில் கலந்து கொள்​கிறார். சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்​கள் நடை​பெறும் இந்த நிகழ்ச்​சி​யில் மெஸ்ஸி ஆயிரக்​கணக்​கான குழந்​தைகளு​டன் உரை​யாட​வும் உள்​ளார் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article