சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
சில மாதங்களுக்கு முன் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இதனால் திரைப்படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் சக நடிகர்கள நடிக்கவுள்ளனர்.