11.8 C
Scarborough

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

Must read

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.

‘AI for Transforming Public Service’ என்ற தலைப்பின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் அரசாங்க அமைச்சுகளின் நிறைவேற்று அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச சேவை டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தயாராக வேண்டும் என்றும், அதற்காக தற்போதுள்ள அரச சேவை மாற வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க இங்கு தெரிவித்தார்.

அரச சேவை தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான சவாலை வெற்றிகொள்வதற்கு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article