17.5 C
Scarborough

சுற்றுலா பயணிகளின் வரியை மீள செலுத்தும் புதிய திட்டம்

Must read

சுற்றுலாப் பயணிகள் இலங்கை உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி சேகரிப்பு முறையை ஒழுங்குமுறைபடுத்துவதற்காகவும் புதிய சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறமதி சேர் வரியை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் முன்னரங்கமொன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பிரதி அமைச்சர் அணில் ஜெயந்த தலைமையில் நேற்று (04) நடைபெற்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இந்த முன்னரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 90 நாட்களுக்கு குறைவாக தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகள் 50000 ரூபாவை விட அதிகமான தொகை VAT வரியாக செலுத்தி இருப்பின் அவர்கள் செலுத்திய VAT வரியை இங்கு மீளப் பெற்றுக் கொள்ளலாம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article