வெற்றிமாறன் இயக்கும் அரசன் என்ற புதிய படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கலைப்புலி எஸ் தானு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என இரண்டு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெற்றிமாறன் பிறந்த நாளை ஒட்டி அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாக உள்ளது.
படத்தின் முன்னோட்ட வீடியோ திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி காலை youtube இல் வெளியாகிறது. 16ஆம் திகதி மாலை 6:2 க்கு திரையரங்குகளில் பிரத்தியேகமாக திரையிடப்படும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

