குருநாகல் மாவட்டத்தின் நாரம்மல பகுதியில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதியின் வலது பக்கமாகத் திரும்பி, எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில், சாரதி ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல-கிரியுல்ல வீதியில், நேற்று (19) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
உயிரிழந்த இரண்டு குழந்தைகளும் 9 மாதங்கள் மற்றும் 11 மாதங்கள் வயதுடையவர்கள் என்றும், சாரதி மாஹோ பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் காயமடைந்து தம்பதெனிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.