‘அசுரன்’, ‘வாத்தி’, விடுதலை 2 ‘ ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து தயாராகும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

