14.5 C
Scarborough

கூகுள் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் டொலர் அபராதம்; கண்டனம் தெரிவித்துள்ள ட்ரம்ப்

Must read

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் வர்த்தக போட்டிக்கான சட்டங் களை மீறி செயல்பட்டதாக கூறி அந்த நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதத்தை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

‘ஐரோப்பா இன்று அமெரிக்காவின் மற்றொரு மிகச்சிறந்த நிறுவனமான கூகுளுக்கு 3.5 பில்லியன் டொலர் அபராதம் விதித்து அதன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இது மிகவும் நியாயமற்றது. அமெரிக்காவில் வரி செலுத்துவோர் ஒவ்வொருவரும் ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக் கையை ஆதரிக்க மாட்டார்கள். எனது நிர்வாகம் முன்பு கூறியது போல இதுபோன்ற பாரபட்சமான செயல்களை நிலைநிறுத்த ஒரு போதும் அனுமதிக்காது. இந்த அபராதத்தை திரும்பப் பெறாவிட்டால் வரிகள் மூலம் பதிலடி தரப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதேபோன்றதான் ஆப்பிள் நிறுவனமும் 17 பில்லியன் டொலர் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னைப் பொருத்தவரை அந்த அபராதம் வசூலிக்கப்படக் கூடாதது. அவர்கள் தங்களது பணத்தைத் திரும்பப் பெற இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனை நாம் அனுமதிக்கமுடியாது. அப்படி நடந்தால், வரி செலுத்தும் அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்ய பிரிவு 301 நடவடிக்கையைத் தொடங்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன்.இவ்வாறு ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓ-க்களை வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் அண்மை யில் சந்தித்தார். இந்த நிலையில், கூகுளுக்கு ஆதரவாக ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

கூகுள் தனது அளவு மற்றும் ஆதிக்கத்தை பயன்படுத்தி காட்சி விளம்பர வணிகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சட்டங்களை மீறி செயல்பட்டுள்ளது. மேலும், கூகுள் விளம்பர தொழில்நுட்பத்தின் போட்டியாளர்களுக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் கூகுளுக்கு அபராதத்தை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article