அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் இன்று (31) குடியேற்றத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் அங்கு எழுந்த குழப்ப நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவோ அல்லது அவர்களின் பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவோ இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான குடியேறிகள் இருக்கின்றனர்.
இத்தகைய பின்னணியில், சிட்னி உட்பட பல முக்கிய நகரங்களில் இன்று ‘அவுஸ்திரேலியாவுக்கான மார்ச்’ என்ற பெயரில் தொடர் பாரிய பேரணிகள் நடத்தப்பட்டன.
இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலிய குடிமக்கள் பங்கேற்றனர்.
நாட்டிற்குள் பெருமளவிலானோர் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
இருப்பினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் போராட்டங்களைக் கண்டித்து, அவை வெறுப்பைப் பரப்புவதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்த போராட்டங்களுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்கள் இன்று நாட்டில் தொடங்கப்பட்டன.
இதன் விளைவாக, மெல்போர்ன் உட்பட பல நகரங்களில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை தலையிட்டது.
பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது மிளகு ஸ்பிரே அடித்து கூட்டத்தைக் கலைத்ததோடு, பலரைக் கைது செய்துள்ளனர்.