இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் 120 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கடந்த 24 மணி நேரத்தில் 74 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேலிய துருப்புக்களை படிப்படியாக திரும்பப் பெறுவதற்கும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்தன
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா போர்நிறுத்தத் திட்டம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

