8.7 C
Scarborough

காதலிக்கு திருமணம் விபரீத முடிவெடுத்த காதலன்!

Must read

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், காதலன் விசமருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 27). இவர், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

விரக்தி அடைந்த காதலன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொடுக்க பெரியவர்கள் மூலம் பிரகாஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீடு கட்டி முடியுங்கள், அதன்பிறகு பார்க்கலாம் என காதலியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

இதனால் சொந்தமாக வீடு கட்டும் பணியில் பிரகாஷ் ஈடுபட தொடங்கினார். மேலும் காதலியை திருமணம் செய்து வைக்க பிரகாஷ் தனது பெற்றோரிடம் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார்.

எனினும் இளைஞனின் பெற்றோர் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு இடத்தில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலிக்கு இன்னொருவருடன் திருமணம் நடக்கவிருந்ததை அறிந்த இளை ஞர் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் மதியம் பூச்சிக்கொல்லி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இறந்தார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் காதலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article