நோவா ஸ்கோடியாவின் நியூ வாட்டர்ஃபோர்ட் ஏரியில் இருந்து 6 வயது சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுளளது.
வீட்டிலிருந்து காணாமல் போன 6 வயது ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனே குறித்த ஏரியின் கரையில் இறந்து கிடந்துள்ளான்.
குறித்த சிறுவன் சனிக்கிழமை மதியம் ஒரு பாறைக்கு அருகில் உள்ள தண்ணீரில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவசர சேவைகள் அவனது உடலை மீட்டன.
குழந்தை காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டதோடு குழந்தையின் தாய் சமையலறை ஜன்னல் வழியாக குழந்தை தப்பிச் சென்றதைக் கவனித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நியூ வாட்டர்ஃபோர்ட் தன்னார்வ தீயணைப்புத் துறையின் துணைத் தலைவர் ஜெரால்ட் கோடி, சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஒரு குழந்தை கரையைக் கடந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவசர சேவைகள் கடற்கரைக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.
பிற்பகல் 3 மணியளவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.