6 C
Scarborough

காசாவில் 140 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல்

Must read

ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன.

பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

காசாவில் 140 பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும், ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதலால், காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்தியஸ்தர்களின் நேர்மறையான எந்தவித அணுகுமுறையையும் பரிசீலனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article