சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபல்யம் அடைந்து வரும் நடிகர் நட்டி என அழைக்கப்படும் நட்ராஜ், ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் ‘கம்பி கட்ன கதை’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி,மனோபாலா, கராத்தே கார்த்தி முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்,
இந்த படம் சதுரங்க வேட்டை படப்பாணியில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படம் எதிர்வரும் 17 ஆம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது இந்த நிலையில் இந்தப் படத்தின் ஜல பல ஜல பாடல் வெளியாகி உள்ளது.

