மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது இதில் கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல் முறையாக தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் வீராங்கனைக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தமிழக கபடி வீராங்கனையான கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையும் முன் வைத்துள்ளார்.
கண்ணகி நகர் என்றாலே ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில் இன்றைக்கு கண்ணகி நகர் என்ற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை என்று அளவிற்கு இந்த வெற்றி பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையும் இல்லை என்பதை கார்த்திகா உண்மையாக்கியுள்ளார்.
அவருக்கு அரச பணியுடன் கூடிய பரிசு தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் கண்ணகி நகரில் வசதிகளுடன் கூடிய கபடி மைதானத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

