கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில், ஒரு நாயை கொலை செய்த நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 40 வயதான இந்த நபர், 2024 ஆம் ஆண்டின் மே 23ஆம் திகதி, நாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். ஆரம்பத்தில் அந்த நாயை காணவில்லை என அவர் கூறினாலும், பின்னர் விசாரணைகளில் நாயை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
அந்த நபர், நாயை பலர் கடித்ததாகவும், நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அந்த நாயை கருணை கொலை செய்ய தேவையான பணம் இல்லாததும், நாய்கள் காப்பகங்களும் அந்த நாயை எடுத்துக்கொள்ள மறுத்ததும் குறிப்பிடப்பட்டு, இதன் காரணமாக நாயை கொன்றதாக கூறினார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால், நீதிமன்றம் குறைந்த அளவிலான தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அந்த நபருக்கு மூன்று மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, வாழ்நாளில் செல்லப் பிராணிகளை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.