கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டிலிருந்து உணவிற்காக அதிகம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் நாளாந்தம் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
இந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது அடுத்த ஆண்டில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று 800 டொலர்கள் மேலாக உணவிற்காக செலவழிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், டெல் ஹோஸ் பல்கலைக்கழகம், குயில்ப் பல்கலைக்கழகம் மற்றும் சஸ்கெட்ஸ்வான் பல்கலைக்கழகம் என்பன கூட்டாக இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 16,833 டொலர்களை உணவுக்காக மாத்திரம் செலவிட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அடுத்த ஆண்டில் சராசரியாக 3 முதல் 5 வீதம் வரையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இறைச்சி, மரக்கறி மற்றும் உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் என்பனவற்றின் விலைகளிலும் கனிசமான அதிகரிப்பு ஏற்படுமென அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.