16.4 C
Scarborough

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு நியூஸி. நட்சத்திர வீரர்கள் ‘குட் பாய்’’

Must read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் டி 20 தொடர் வரும் 16-ம் தேதி கிறைஸ்ட் சர்ச் நகரில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரை கருத்தில் கொண்டு நியூஸிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் பலர் பாகிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரில் சேர்க்கப்படவில்லை.

கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் சாண்ட்னர், டேவன் கான்வே, லாக்கி பெர்குசன், கிளென் பிலிப்ஸ், ரச்சன் ரவீந்திரா ஆகியோர் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள உள்ளதால் பாகிஸ்தான் தொடருக்கு தேர்வாகவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சாளர்களான கேல் ஜேமிசன், வில் ரூர்க் ஆகியோர் முதல் 3 போட்டிகளில் மட்டும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரு ஆட்டங்களில் மேட் ஹென்றி இடம்பெறுவார் என தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், உடற்தகுதியை எட்டினால் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக இடம் பெறவில்லை.

அணி விவரம்: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ் (4, 5-வது ஆட்டம்), மிட்ச் ஹே, மேட் ஹென்றி (4, 5-வது ஆட்டம்), கைல் ஜேமிசன் (முதல் 3 ஆட்டங்கள்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷாம், வில் ஓ’ரூர்க் ( முதல்3 ஆட்டம்), டிம் ராபின்சன், பென் சீயர்ஸ், டிம் ஷெய்பர்ட், இஷ் சோதி.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article